"உதிநிர லாவொரு வன்செய்கை ஈட்டல் உரைத்தல்வினை
முதல்விளக் காம்" - குவ. 56]
அவற்றுள் குணமுதல்நிலைத்தீவகம் வருமாறு :
"சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்த
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பு,
மிசைஅனைத்தும், புட்குலமும் வீழ்ந்து"
என வரும்.
[அரசனுடைய கண்கள் சிவந்தன ; பகை மன்னருடைய பெரிய தோள்கள் சிவந்தன ; குருதி பாய்ந்த திசைகள் எல்லாம் சிவந்தன ; வில்லிருந்து வெளிப்பட்ட அம்புகளும் சிவந்தன; எண் திசைகளிலுள்ள பறவைகளும் குருதியில் படிந்து சிவந்தன.
இப்பாடலில், முதலிலுள்ள சேந்தன என்ற பண்புச்சொல், பல இடங்களிலும் கொள்ளப்பட்டுப் பொருள் தந்தவாறு காண்க. விளக்கு ஓரிடத்தில் இருப்பினும் எப்புறமும் அதன் ஒளி பரவுமாறு போல, ஓரிடத்துள்ள சொல்லின் பொருள் பாடலில் எல்லா இடங்களிலும் பொருந்திப் பொருள்தரும் அழகு விளக்கணி என்று பெயரிடப்பட்டது.]
தொழில் முதல்நிலைத் தீவகம் வருமாறு:
"சரியும் புனைசங்கும், தண்தளிர்போல் மேனி
வரியும், தனதடம்சூழ் வம்பும், - திருமான
ஆரம் தழுவும் தடந்தோள் அகளங்கன்,
கோரம் தொழுத கொடிக்கு"
என வரும்.
[திருமகளைப்போல ஆதிதிமாலையும் இடையறாது தங்கியிருக்கும் பெரிய தோள்களை உடைய களங்கமற்றவனாகிய சோழனுடைய குதிரையை அவன் வீதி உலா வந்த காலை தொழுத தலைவிக்கு, அவள் கைகளில் அணிந்த சங்கு வளையல்களும் |
|
|