[சான்றோருக்குத் துறவொழுக்கம மேற்கொள்ளப்பட்டதாக அதற்கு ஏலாததாகிய கூடாவொழுக்கமும், தூய உணவுகள் பலவும் இருக்கவும் புலாலைத் துறவாது அதனோடு உண்ணும் உணவும், உலகறய மணந்த கணவன் கட்கான் தெய்வமாக இருப்பவும் மகளிர் வேற்றுத் தெய்வத்தை வழிபடுதலும் ஏற்புடைய செயலாகக் கொள்ளப்படுவது அன்று.
இப்பாடலில் "ஒன்று உண்டாக வைக்கற்பாற்றன்று" என்ற தொழிலை உணர்த்தும் இறுதியிலுள்ள சொற்றொடர் இளிவரவு, ஊண், தெய்வம் என்ற ஒவ்வொன்றோடும் தனித்தனியே இயைந்து பொருள் தந்துள்ளமை காண்க. "வைக்கற்பாற்றன்று" என ஒருமையாய்நின்றது அதுபற்றியே என்க.]
பொருள் கடைநிலைத் தீவகம் வருமாறு:
"புறத்தன, ஊரன, நீரன, மாவின்
திறத்தன, கொற்சேரி யல்வே, - அறத்தின்
மகனை முறைசெய்தான், மாவஞ்சி யாட்டி,
முகனை முறைசெய்த கண்"
என வரும். ஏனைய வந்துழிக் காண்க.
[அறத்திற்காக மகனையே தேர்க்காலில் கிடத்தி அவன்மீது தேரை ஓர்ந்து செங்கோலைப் பாதுகாத்த மனுநீதிச்சோழனுக்கு உரிய வஞ்சி நாட்டில் வாழும் தலைவியின் முகத்தை அழகு செய்யும் கண்கள், வெளியிலுட்ளள மான்களாகவும், ஊரிலுள்ள அம்புகளாலும், நீரிலுள்ள குவளைகளாகவும், மாமரத்திலுள்ள வடுக்களாகவும், கொல்லன் சேரியில் உள்ள வாள்களாகவும் வேல்களாகவும் உள்ளன.
இப்பாடலில், கண் என்ற இறுதியில் வந்துள்ள பொருட்பெயர் புறத்தன முதலிய சொற்களோடு தனித்தனி இணைந்து பொருள் படுமாறு காண்க. |
|
|