இவை மாறன் அலங்காரம்] 160
ஈண்டுக் கூறிய குணமும் காலம் புணர்ந்து நின்றமையின் தொழில் அன்றோ
எனின், இவ்வாறே குணமும் தொழிலும் தோன்றுங்கால் காலம் புணர்ந்து நிற்றல்
ஒக்குமேனும், குணம், பொருளது புடை பெயர்ச்சியாய் நீங்கி நிற்கும் தொழில்
போலாது, பொருட்குப் பண்பாய்த் தனக்கு வேறு பண்பு இன்றி அப்பொருளை
நீங்காது நிற்கும சிறப்பால்,. குணத்தீவகம் என்றார்.
[பண்பாவது ஒரு பொருள் தோன்றுங்கால் தோனறி அது கெடுந்துணையும்
கெடாது நிற்பது. பண்புக்குப் பிறிது ஒரு பண்பு விசேடணமாகாது.
தொழிலாவது ஒரு பொருளின் புடைபெயர்ச்சியாய்ச் சிறிது பொழுது நிகழ்ந்து
கழிவது.
சில சொற்கள் பண்பாகவும் வரும்; தொழிலாகவும் வரும். பண்பு என்பதனையும்,
வினை என்பதனையும் இடம் நோக்கி உணர்தல் வேண்டும்.
இறைவன் எப்பொருளின் கண்ணும் உளன் - பண்பு.
பொற்றோற் பாசறை மன்னன் உளன் - தொழில்.] 27
25-26