196

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     விண்கவரும், வேரிப் பொழில்புதைத்கும், மென்மயில்கள்
     கண்கவரும், மீதுஎழுந்த கார்"

 எனவரும். ஒருபொருள்திறமே கொண்டு முடிதலின் இவ்வொருபொருள்
 தீவகம் பொருள் தீவகத்தின் வேறாயிற்று.

     [வானத்தில் எழுந்த மேகம் உலகைச் சூழ்ந்த எண் திசைகளையும் தன்னிடத்து
 அடக்கிக்கொள்ளும்; துணைவராயினார் அயன்மை உடையவராகப் பிரிந்து
 செல்லப்பட்ட தலைமகளிருடைய உயிரைக் குடிக்கும் ; வானத்தை மறைக்கும்;
 சோலைகளை மூடும்; மயில்களின் கண்களைக் கவர்ச்சி செய்யும் - என்ற இப்பாடலில்,
 கார் என்ற சொல் பாடலின் பல இடங்களிலும் இயைந்து அதன் செயல்களைக்
 குறிப்பிடுவது காண்க. இப்பாடலில் உள்ள விழுங்கும், பருகும், கவரும், புதைக்கும்
 என்ற சொற்கள்யாவும் கார் என்ற பொருளின் திறமே குறிப்பிடும் ஒருபொருட்
 பன்மொழிகள் ஆதலன் இப்பாடல் ஒருபொருள் தீவகம் ஆயிற்று.]

     சிலேடைத் தீவகம் வருமாறு:

    "மான்மருவி, வாள்அரிகள் சேர்ந்து, மருண்டுஉள்ளம்
     தான்மறுக, நீண்ட தகைமையவாய்க் - கானின்
     வழியும், ஒருதனிநாம் வைத்தகன்ற மாதர்
     விழியும், தருமால் மெலிவு"

 என வரும்.

     [இப்பாடலில் முதல் இரண்டு அடிகள் கானவழிக்கும், மாரர் விழிக்கும் சிலேடை;
 மெலிவுதருமால் என்ற தொடர் வழிவழி - என்ற இரண்டனோடும் தனித்தனி
 இயைந்து பொருள் தருவது தீவகம்.

     கானவழி மான்கள் இருத்தலானும், கொடிய சிங்கங்கள் தங்குதலானும், மயங்கி
 உள்ளம் வருந்துமாறு நீண்டு காணப்படுகிறது;