நிகழ்ந்தவினை விலக்கு வருமாறு:
மாதர் நுழைமருங்குல் நோவ, மணிக்குழைசேர்
காதின் மிகைநீலம் கைபுனைவீர்! - மீதுஉலவும்
நீள்நீல வாட்கண் நிமிர்கடையே செய்யாவோ?
நாள்நீலம் செய்யும் நலம்
என வரும்.
[இப்பெண்ணின் மெல்லிய இடை மிகையான பாரத்தால் நோகுமாறு அழகிய காதணியை அணிந்த காதின்மீது மிகையான நீலமலரை ஒப்பனை கருதிச் செருகுகின்றவர்களே! நாற்றிசையும் உலவும் நீண்ட நீலநிறமான ஒலிபொருந்திய இவளுடைய கண்கள்காதளவும் நீண்டிருந்தலின் அன்றலர்ந்த நீலமலர் செய்யும் அழகைத் தாமே செய்யமாட்டாவா?
இப்பாடலில், நீண்ட நீலவிழியாளுக்குக் காதுகளில் நீலமலர் சூடுவது மிகை என்று அவ்வொப்பனை விலக்கப்படுகின்றவாறு,]
எதிர்வினை விலக்கு வருமாறு:
முல்லைக் கொடிநுடங்க, மொய்காந்தள் கைகுலைப்ப,
எல்லை இனவண்டு எழுந்திரங்க, - மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால், செயல் அறியேன்;
போவாய், ஒழிவாய், பொருட்கு"
என வரும், எல்லை - ஒளி.
[தலைவனே! முல்லைக்கொடி அசையவும், செறிந்த காந்தள் கைகளைப் போலப் பூப்பவும், ஒளிபொருந்திய வண்டுக் கூடடம் ஒலிக்கவும், தலைவியின் மீது வீசுவதற்குக் கொடியவாயினை உடைய நெடிய வாடைக்காற்று வரும்போது, அவளை ஆற்றுவிக்கும் திறத்தைனைத் தோழயாகி யான் அறியேன்., என்னுடைய இச்செய்தியைக் கேட்ட பிறகு தலைவியைப் பிரிந்து பொருள் தேடுவதற்குப் போதலையோ, அவளைப் பிரியாது உடன் இருத்தலையோ உன் விருப்பப்படி செய்."- |
|
|