படுகிறதோ? அறியேன் - என்ற இப்பாடலில், தலைவியால் ஏற்படும் தன்நலிவுகளைக் கூறித் தலைவன் அவளுக்கு மென்மைப் பண்பு இல்லை என்று விலக்கியவாறு காண்க.]
காரண விலக்கு வருமாறு:
"மதர்அரிக் கண்சிவப்ப, வார்புருவம் கோட,
அதரம் துடிப்ப, அணிசேர் - நுதல்வியர்ப்ப,
நின்பால் நிகழவனகண்டு, அஞ்சாதால் என்நெஞ்சம்;
என்பால் தவறுஇன்மை யால்"
என வரும்.
[செழித்த அரிகள் பரந்த கண்கள் சிவப்பவும், நேரிய புருவங்கள் வளையவும், உதடுகள் துடிப்பவும், அழகு அமைந்த நெற்றி வியர்ப்பவும், நின்னிடத்துக் காணப்படும் வெகுளிபற்றிய வேறுபாடுகளைக் கண்டும், அவ்வெகுளிக்கு உரிய காரணம் எதுவும் என்னிடத்து நிகழாமையால் என்மனம் உன் வெகுளிக்கு அஞ்சவில்லை - என்று தலைவன் தலைவியின் ஊடடிலப் போக்குவிக்கும் இப்பாடலில், தலைவியின் வெகுளிபற்றி நிக.ழும் மெய்ப் பாடுகளுக்குக் காரணமாகிய தவறு எதுவும் தன்னால் நிகழ்த்தப் படவில்லை என்று அவளிடம் கூறி வெகுளியின் காரணத்தை விலக்கியவாறு.]
காரிய விலக்கு வருமாறு:
மன்னவர் சேயர்; மயில்அகவி ஆடலும்,
பொன்மலரும் கொன்றையும், பூந்தளவின் - பன்மலரும்,
மின்உயிரா நீள்முகிலும், மெய்என்று கொள்வதோ?
என்உயிரோ, இன்னும் உளது"
எனவரும்.
[தலைவன வினைவயின் பிரிந்து சேய் நாட்டில் உள்ளான். அவன் கார் காலத்து மீள்வதாகக் கூறிப் பிரிந்து சென்றான். அவன் கூற்றை மெய் என்று உட்கொண்ட என் உயிர் அக்காலம் |
|
|
|