[கொடிய இடியோசையை எழுப்புவித்து அதற்குக் காரணமான கொடிய வெப்பத்தை உடைய பேரிடைய உட்கொண்டிருந்தாலும், மழைபெய்யும் கார்மேகத்தை யாவரும் விரும்புவர். உலகில் புகழை அழிக்கும் குற்றங்கள் பலவாகத் தம்மிடத்து வளரினம், மற்றவருக்குப் பொருளை வாரிக்கொடுக்கும் வள்ளன்மையுடையார் மேலதே புகழ் - என்ற இப்பாடலில்,
"வையத்து ........ புகழ்" என்ற பொதுப்பொருளால் "வெய்யகுரல்........... பேணுவரால்" என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு.
"அகம்அமர்ந்து ஈதலின்நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்" - குறள் 92
முதலிய சான்றோர் கருத்துக்கு மாறாக, வள்ளன்மை ஏனைய குணங்களுள் தீயவற்றைச் செகுத்துப் புகழ்தரும மாறுபாட்டை உலகின்மேல் வைத்து விளக்குவதால், இதுஅ முரணித்தோன்றல் ஆமாறு காண்க. தீமைகளிடையே நன்மைத் தோற்றம் முரணித் தோன்றல் எனினும் ஆம்.]
சிலேடையின் முடித்தல் வருமாறு :
"எற்றே! கொடிமுல்லை, தன்னை வளர்த்துஎடுத்த
முற்றிழையாள் வாட, முறுவலிக்கும்; - முற்றும்
முடியாப் பரவை முழுங்குஉலகத்து,
என்றும், கொடியார்க்கும் உண்டோ குணம்?"
என வரும்.
[கொடியாகிய முல்லையின் இயல்பு எத்தன்மைத்து! தன்னை வளர்த்துக் கொழுகொழும்பொடு இணைத்த தலைவி வாடி நிற்கவும் தான்தன் முல்லை முகைகளால் புன்முறுவல் பூக்கின்றனது. முழுதும் அழியாத கடல் முழங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் என்றும் கொடியாரிடத்தில் நற்குணம் காண்டல் அரிது - என்ற இப்பாடலில், "முற்றும்.....குணம்" என்ற பொதுப் பொருளால் "எற்றே......முறுவலிக்கும்" என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு,
|
|
|