என வரும். மலரி - ஊர். இது கூற்று.
[மாதர் நோக்கும் கூத்தன் வாக்கும் இயல்பினான் சமமாவன. மாதர் நோக்குக்
காதளவும் நீண்டு கடைசிவந்து என் உள்ளத்தில் எல்லையற்ற இன்பத்தை நிறைக்கும்;
மலரி என்ற ஊரில் தோன்றி கூத்தன் என்ற புலவனின் வாக்குத் தன் சீரிய கூரிய
தீஞ்சொற்களாலே என் காதுகளை அடைந்து என் மனத்தில் எல்லையற்ற
இன்பம் பயக்கும் - என்ற இப்பாடலில்,
இரு பொருள்களின் இயல்புகமளை "சென்று...........நிறைப்ப" என்று சமமாகக்
கூறிப்பின் இரண்டனையும் மாதர்நோக்கு எனவும் கூத்தன் வாக்கு எனவும்
வேற்றுமை செய்து காட்டியவாறு.]
சமன் அன்றி மிகுதி குறைவான் கூற்றினான் வேறறுமை செய்தல் வருமாறு: