அணியியல் - வேற்றுமையணி

229 

     [மிக்க தேர்ப்படையை உடைய சோழனுடைய காஞ்சி மாநகரும், பெரிய கடலும்
 தம்முமடைய ஒலியினாலும் பெருமையாலும் சமமாகும் எனினும், காஞ்சிமாநகரில்
 கடல்படு பொருள்கள் யாவும் கிட்டுவவாகவும், கடலில் காஞ்சி மாநகரில் கிட்டும்
 பொருள்கள் யாவும் பெறப்படமாட்டா - என்ற இப்பாடலில்.

     முதலில் காஞ்சி மாநகரும் கடலும் ஒக்கும் என்று கூறிப் பின் காரணம் காட்டின்
 காஞ்சி மாநகர் கடலினும் மேம்பட்டது என்று வேற்றுமை செய்தவாறு. இம்மூன்று
 பாடல்களும் வெளிப்படையாக வேற்றுமையைப் பெறப்பட வைத்தன.]

     இருபொருளான் குறிப்பினான் வேற்றுமை செய்தது வருமாறு:

    "கார்க்குலமும் பாய்திரையும் காட்டும் கடல;படையும்
     போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமாம்; - ஏற்ற
     கலம்உடைத்து முந்நீர்க் கதிர்ஆழி; திண்தேர்
     பலஉடைத்து, வேந்தன் படை"

 என வரும். ஒருபொருளான் வேற்றுமை செய்வது வந்துழிக் காண்க.

     [கடலும் படையும் சமமாவன. கடலில் மேகக் கூட்டங்களும் குதிக்கும்
 அலைகளும் காணப்படுகின்றன. படையில் போர்க் களிறுகளும் போர்க்குதிரைகளும்
 செயற்படுகின்றன. ஒளிமிக்க கடல பல மரக்கலங்களைப் பெற்றிருக்கின்றனது.
 அரசனுடைய படை திண்ணி தேர்கள் பல பெற்றிருக்கிறது - என்ற இப்பாடலில்,
 கடலையும் படையையும் ஒப்பிட்டுப் பின் இரண்டையும் குறிப்பினால் வேறுபடுத்திக்
 காட்டியவாறு காண்க.

    "மாதராள் வெய்யமுலை மாணிக்க முத்துவடம்
     மீதுலா வுந்தகைத்தாம் வேரிமகிழ்ச் - சோதி
     துடரிவரை தேன்அருவி; தூநீர் அருவி
     படர்இயல நல்காதின் பம்"

 இப்பாடலில் வடம்பூட்டிய முலையும் தேனருவி பாயும் துடரி