230

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வரையும் சமம் என்று கூறிப் பின் அருவி இன்பம் நல்காது என்று ஒருபொருளான்
 குறிப்பினால் வேற்றுமை செய்த திறத்தைக் காண்க.                    - மா. 131 

     சமன் அன்றி மிகுதிகுறைவான் குறிப்பினான் வேற்றுமை செய்தது வருமாறு:

    "பதுமம் களிக்கும் அளிஉடைத்து; பாவை!
     வதனம் மதர்நோக்கு உடைத்து; - புதைஇருள்சூழ்
     அப்போது இயல்புஅழியும் அம்போருகம்; வதனம்
     எப்போதும் நீங்காது இயல்பு"

 என வரும். பிறவும் அன்ன.

     [தாமரை களிக்கும் வண்டுகளை உடையது. பாவை போல்வாய்! உன்முகம்
 செழித்த கண்களை உடையது. இருள் குழும் இரவில் தாமரை தன் மலர்ச்சி
 குன்றாது என்ற பாடலில், முதல் இரண்டடிகளில் தாமரைக்கும் தலைவி
 முகப்பிற்கும் குறிப்பினால் ஒப்புமை கூறிப் பின் இரண்டடிகளில் குறிப்பினால்
 முகத்தின் சிறப்பெடுத்தியம்பி வேற்றுமை செய்தவாறு.

    "பதுமம் ........ நோக்கு உடைத்து" - குறிப்பினால் சமம்.

    "புதைஇருள் .......... இயல்பு" - குறிப்பினால் வதனத்தின் உயர்வு.]

     குணவேற்றுமை வருமாறு:

    "சுற்றுவில் காமனும், சோழர் பெருமானாம்
     கொற்றப்போர்க் கிள்ளியும், கேழ்ஒவ்வார்; - பொற்றொடியாய்!
     ஆழிஉடையான் மகன்மாயன்; சேயனே.
     கோழி உடையான் மகன்"

 என வரும்.