அணியியல் - ஏதுவணி

257 

    "காரணம் காரியத் தோடு சார்த்தலும்
     காரிய காரண ஒற்றும காண்டலும்
     என்றிரு வகத்தாம் ஏது அணியே."                             - ச. 125

    "காரண மான தொடுகா ரியத்தக் கழறுமதின்
     பேரம் ஏது அணியாம்."                                 - குவ. அ. 100

 இவ்வொத்த நூற்பாக்கள 657, 658, 659 மூன்றற்கும் கொள்க.]

     ஆக்கம் பற்றி வந்த கருத்தாக் காரகஏ வருமாறு :

    "எல்லைநீர் வையகத்து, எண்இறந்த எவ்வுயிர்க்கும்
     சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் ; -- முல்லைசேர்
     தார்அலைத்து, வண்கொன்றைத் தார்அலைத்து, வண்டார்க்கப்
     பூதலத்து வீழ்ந்த புயல்"

 என வரும்.

     [முல்லக் கொடியின் மகரந்தத்தை அளைந்து, மாலைபோலத் தொடர்ச்சியாக அமந்த பசிய
 கொன்றைப்பூங்கொத்தை அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்க, நிலத்தில் மழையாக வீழ்ந்த மேகம்,
 கடல் சூழ்ந்த உலகிலுள்ள எண்ணற்ற எல்லா உயிர்களுக்கும் சொல்லுக்கும்
 அடங்காத பேரின்பத்தை விளைத்த - என்ற இப்பாடலில், புயல் ஆகிய கருத்தா
 பேரின்பம் தோற்றுதலாகிய ஆக்கத்தை தரையில் வீழ்தலாகிய காரகத்தால்
 வெளிப்படுத்தியவாறு.]

     அழிவுபற்றி வந்த கருத்தாக் காரகஏ வருமாறு :

    "கணிகொள் பொழில்அருவி கைகலந்து, சந்தின்
     பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து, -- தனிஇருந்தோர்
     சிந்தை யுடனே உயிர்உணக்கும், தென்மலையம்
     தந்த தமிழ்மா ருதம்"

 என வரும்.

     [தெற்கிலுள்ள பொதிய மலயில் தோன்றிய இனிய தென்றல் காற்று, கணிகளைக்
 கொண்ட பொழில்கள் சூழ்ந்த அருவி நீரைச்

       33-34