ஒத்த நுற்பாக்கள்
முழுதும் - தண்டி 61, 62
வீரசோழியம் 168, மாறன் அலங்காரம் 193, 194.
என்றும் அபாவ ஏது வருமாறு :
"யாண்டும் மொழிதிறம்பார் சான்றவர்; எம்மருங்கும்
ஈண்டும் முகில்கள், இனம்இனமாய் -- மூண்டெழுந்த
காலையே கார்முழங்கும் என்றுஅயரேல் ; காதலர்தேர்
மாலையே நம்பால் வரும்."
என வரும்.
["நாற்றிசையும் நெருங்கி வரும் மேகங்கள் கூட்டம் கூட்டமாய்ப் புறப்பட்டு வந்த அளவிலேயே அவை முழங்கிக் கார்காலத்தை அறிவிக்கும் என்று வருந்தாதே. சான்றோர் எக்காலத்தும் சொல்லிய சொல்லைத் தவறார் ஆதலின், தாம் குறித்தவாறே தலைவருடைய தேர் மாலையே நம் இல்லத்துக்கு வேற்றுப் புலத்திலிருந்து மீண்டு வந்துவிடும்" என்று பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி தலைவனுடைய சால்பு கூறி ஆற்றுவித்த இப்பாடலில்,
சான்றோர் சொன்ன சொல் தவறுதல் என்றும் இல்லை என்ற காரணம் தலைவன் தேர் தவறாது வருதற்கு ஏதுவாயினவாறு. சான்றோர் யாண்டும் மொழி திறம்புதல் என்றும் இல்லை ஆகலின், இஃது என்றும் அபாவமாம்.]
இன்மையது அபாவஏது வருமாறு ;
"கார்ஆர் கொடிமுல்லை நின்குழல்மேல் கைபுனைய
வாராமை இல்லை வயவேந்தர் ; -- போர்கடந்த
வாளை ஏய்கண்ணி ! நுதல்மேல் வரும்பசலை,
நாளையே நீங்கும் நமக்கு"
|
|
|