அணியியல் - சுவையணி

285 

     [மறவர்குல மகளைத் தனக்கு மணம்செய்து கொடுக்குமாறு போரிட்ட
 பகைவேந்தன் தூது அனுப்பியபோது, போருக்கு உரிய அடையாள மாலையை
 அணிந்த தோள்களை உடைய மறவன் கைகளைப் பிசைந்து உதடுகளை மடித்துக்
 கண்சிவந்து பெருமூச்செறிந்து உடல் வெப்பத்தால்நடுங்க வியர்த்து வெகுண்டு
 போருக்குப் புறப்பட்டான் -- என்ற இப்பாடலில், கைபிசைதல் முதலிய
 வெகுளிக் குறிகள் புலப்படுத்தப்பட்டவாறு காண்க.

    "உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
     வெறுப்பின் வந்த வெகுளி நான்கே"                    - தொ. மெ. 10 

 என்ற வெகுளியின் நிலைக்களன்கள் நான்கனுள் ஈண்டுக் குடிகோள் காரணமாக
 வெகுளி பிறந்தவாறு.]

     நகைச்சுவை வருமாறு :

    "நாண்போலும் தன்மனைக்குத் தான்சேறல் ; இந்நின்ற
     பாண்போலும் வெவ்வழலில் பாய்வதூஉம்; -- காண், தோழி !
     கைத்தலம் கண்ணாக களவுகாண் பான்ஒருவன்,
     பொயத்தலை முன் நீட்டியது போன்று"

 என வரும். இதன்திறத்து வருவன பிறவற்றிற்கு உதாரணம் அகத்திணையியலுள்
 காண்க.                                                            46 

     தலைவன் பரத்தையிற் பிரிந்துசென்று பின் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குப்
 பாணனை வாயிலாக விடுத்தானாகப் பாணனுக்கு வாயில் மறுத்த தோழி கூற்று இது.

     "தலைவியே ! தன் வீட்டிற்குத் தானே நேரில் வருவது வெட்கப்படத்தக்க செயல்
 போலும் ! தலைவன் புறத்தொழுக்கம் உடையனல்லன்" என்று உறுதி கூறி நெருப்பில்
 பாய்ந்து தன் உறுதிமொழியை மெய்ப்பிப்பவன் இப்பாணன் போலும் ! தன்
 கைகளையே கண்களாகக்கொண்டு இருட்டில் தடவிப் பார்த்துப் பொருள்களைக் களவு
 செய்பவன், ஆங்குள்ளாரின் உறக்கம் பற்றி அறியப் பொய்த்தலையை நீட்டியது
 போன்றுள்ளது, தலைவனால் முன்னோடியாக அனுப்பப்பட்டுள்ள பாணன் வரவு" -
 என்ற இப்பாடலில், தலைவனையும் பாணனையும் எள்ளிநகையாடியவாறு