அணியியல் - அவநுதியணி

295 

    "ஒருபொரு ளின்தரு மந்தனை அவ்விடத் தேஒழித்து
     மருவதை வேறுஒன்றில் ஆரோபம் செய்ய வரில்அதின்பேர்
     அரும்வேறு பாட்டுஒழிப் பாம்."                             - குவ. 17 

    "உள்ள துரைத்தொரு வர்க்குஉறு சங்கை ஒழித்திடுதல்
     விள்ளும் மயக்க ஒழிப்பாம்"                                - குவ. 18 

    "மன்னும் ஒருவன்சந் தேகித்தது ஓர்உண்மையை மறைத்தல்
     தன்னைவல் லோர்ஒழிப் பென்பார்."                         - குவ. 19 

    "கைதவ மேமுத லாகிய வாசகம் காட்டிமறைவு
     எய்த உரைத்தல் அதுகை தவஒழிப்பு."                      - குவ. 20] 

     சிறப்பு அவநுதி வருமாறு :

    "நறைகமழ்தார் வேட்டார் நலன்அணியும் நாணும்
     நிறைவும் நிலைதளரா நீர்மை, -- அறநெறிசூழ்
     செங்கோலன் அவ்வன் கொடுங்கோலன் தெவ்அடுபோர்
     வெங்கோப மால்யானை வேந்து"

 என வரும்.

     [பகைவர்களை அழிக்கும் போர்த்தொழிலையும், கொடிய கோபத்தையும் மத
 மயக்கத்தையும் உடைய யானைகளையும் உடைய அசரன், தன் நறுமணம் கமழும்
 மாலையை விரும்பிய பெண்களுடைய அழகு, அணிகலன், நாணம், நிறை இவை
 தளராதபடி அவர்களிடத்தில் கருணைகாட்டித் தண்ணளி செய்யும் செங்கோலன்
 ஆகாது கொடுங்கோலனாயுள்ளான் - என்ற இப்பாடலில்,

     அரசனைக் கொடுங்கோலன் போற் கூறி அவள் தன் உரிமை மகளிரையன்றி
 ஏனையர் பிறரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்பட வைத்தமையானும்,
 செங்கோலன் என்ற சிறப்பை மறுத்துக் கொடுங்கோலன் என வெளிப்படைச்
 சொல்லாற் கிளந்தமையானும சிறப்பு அவநுதியணி அமைந்தவாறு காண்க.]