மயக்கம்; மதி - கருத்து; திரிதல் - வேறுபடுதல்; மணம்-வாசம்; துணைமேவலார் -
துணைவரைப் பிரிந்தார்; கடிதல் - அஞ்சுதல்.
புணர்ந்தோர்மேல் செல்லுங்கால், மாலை - அந்தி; மதி - திங்கள்; திரிதல் -
உலாவுதல்; மணம் - கூட்டம்; துணைமேவலார் - துணைவரைப் பொருந்தினார்;
கடிதல்-விளக்கம்.
[இப்பாடல் துணைவரைப் பிரிந்தாருக்கும் துணைவரைக் கூடினார்க்கும் சிலேடை.
துணைவரைப் பிரிந்தவர்கள் மயக்கத்தைப் பொருந்தி, மனம் திரிவுபட, பூக்கள்
மணம் நாறும் மாலைக்காலத்தில் அஞ்சுமாறு கடல் கரையைமோதி அலைவீசி
ஆரவாரிக்கும்; அகன்ற பொழில்களில் புக்குப் பறவைகள் ஒலி அடக்கும்.
துணைவரைக் கூடியவர்கள் அந்திப்பொழுது பொருந்தி, வானத்தில் நிலா
ஒளி வீசச் துணைவரைக் கூடும்போது அவர்கள் மனம் மகிழுமாறு கடல்
ஒலிக்கப் பறவைகள் ஒலி அடங்கும்.
இச்சிலேடைப் பாடலின் முதல் இரண்டு அடிகளிலும் சிலேடை வந்தமை காண்க.
ஆர்கலி அடங்காது ஆர்க்கும், ஆர்கலி அடங்கும் என்ற முரண்பட்ட வினைகள்
ஏனை இரண்டடிகளில் முடிக்கும் சொற்களாய் வந்துள்ளமையும் காண்க.]