இதுவும் அது.
[மனுநீதி கூறும் முறைப்படிச் செங்கோல் செலுத்தும் சோழனே! நீ இன்று
உனக்கு உரிமையாகப் பெற்றுள்ள செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்,
எல்லையற்ற புகழை உடைய உன் குலத்து முற்பட்ட மன்னர் அனைவரையும் முன்பு
கூடினவள் அல்லளோ? - என்ற இப்பாடலில்,
பலரும் மணந்த ஒருத்தியைச் சோழன் தானும் மணந் துள்ளான் என்று பழிப்பது
போலக் கூறி, பரம்பரையாகச் செல்வக்குடியில் பிறந்து கருவிலே திருவுடையவன்
சோழன் என்ற புகழ்ச்செய்தியைக் குறிப்பால் பெறப்பட வைத்தவாறு காண்க.]
மேற்கூறிய இலேசத்தின் பாற்படும் பழிப்பது போலும் புகழ் புலப்படுத்தலோடு
இப்புகழாப் புகழ்ச்சிக்கும், புகழ்வது போலப் பழித்திறம் புனைதலோடு
மேற்கூறிய மாறுபடு புகழ்நிலைக்கும் வேற்றுமை யாதோ எனின், பழிப்பதுபோலப் புகழ்
புலப்படுத்தல் ஒன்றனையே பழிப்பதுபோலப் புகழ்வது. புகழ்வது