அணியியல் - பொது
35
வரலாறு :
"என்னே ! சிலமடவார் எய்தற்கு எளியவோ ? பொன்னே ! அநபாயன் பொன்நெடுந்தோள் ;- முன்னே தனவேஎன்று ஆளும் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு"
என வரும். (4)
விளக்கம்
ஒரே பாடலில் பொருள் முற்றுப்பெறுவது முத்தகச் செய்யுள்.
பொன்னே ! அநபாயன் தோள் சயமடந்தையின் தோள்களாகிய மூங்கில்கள் உரிமைகொண்டு மிடையும் மலைகளாம். அவை அச்சயமடந்தை அன்றி வேற்று மகளிர் தழுவுதற்கு எளிய அல்ல - என்று அநபாயன் தோள் வேட்ட தலைவு நெஞ்சழிந்து தோழியிடம் சொற்றது. பொன்னே ! பொருப்பு மடவார் எய்துதற்கு எளியவோ - எனப் பொருள் முற்றுப் பெற்றுள்ளமையின் இப்பாடல் முத்தகச் செய்யுளுக்கு எடுத்துக்காட்டு.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 3, மு. வீ. செய்யுளணி 5
"முத்தகம் தன்பொருள் ஓர்கவியின் முற்றும்"
- வீ. 178
"என்றும் அவற்றுள் எழுவாய் தனிநின்று சென்று பொருள்முற்றும் திடன்"
- மா. 67
குளகச் செய்யுள்
624. குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும். இது குளகச செய்யுளது இயல்பு கூறுகின்றது.