354

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     முற்றுஆதி இடைமடக்கு வருமாறு:

    "கொண்டல் கொண்டுஅலர் பொழில்தொறும்
          பண்ணையாய் பண்ணையா யத்துள்ளார்
     வண்டல் வண்டுஅலர் தாதுகொண்டு
          இயற்றலின் வருமணல் மணல்மன்றில்
     கண்டல் கண்டக மகிழ்செய
          ஓதிமம் கலந்துறை துறைவெள்ளம்
     மண்டல மண்டலம் முழுதுடன்
          வளைதரு வளைதரு மணிவேலை"

 என வரும்.

     [உலகம் முழுதையும் சூழ்ந்திருக்கும், சங்குகளைத் தரும அழகிய கடலே!
 கீழ்க்காற்றைக  கொண்டு பூக்கின்ற சோலைகள் தொறும், இசையை ஆராயும்
 விளையாடற் சிறுமியர் சிற்றிலை வண்டுகளால் வெளிப்படும் மகரந்தத் தூள்களைக்
 கொண்டு இயற்றுதலின் மணம் வீசவும் மணல் பகுதியிலே தாழையைக் கண்டு மனம்
 மகிழ் கூரவும், அன்னங்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும் நீர்த்துறையில் வெள்ளத்தைக்
 கண்டு ஏறாது ஒழிவாயாக - என்று சிறுமியரது விளையாடல் கண்டு மகிழும்
 தாயர் கடலைப் பரவியவாறு.

     நீர் பெருகின் சிற்றில் சிதையும் என்றவாறு.

     கொண்டல் கொண்டு - பண்ணினை ஆயும் பண்ணை - வண்டல், வண்டு அலர
 தாது - கண்டல் கண்டு - கலந்து உரைதுறை, மண்டல் - மண்தளம்,
 வளைதரு - என பிரித்துப் பொருள் செய்க.

     இது முதல் இடை முற்று மடக்கு.]

     முற்றுஆதி இடை மடக்குவருமாறு:

    "நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல் கோடல்
     வரையா வரையா இருள்முன்வரு மாலை மாலை
     விரையா விரையா எழுமின்ஒளிர் மேக மேகம்
     உரையா உரையா ரினும்ஒல்லன முல்லை முல்லை"

 என வரும்.