36

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இ-ள்: குளகச் செய்யுள் என்பது பலபாட்டாய் ஒருவினை கொண்டு முடிவது
 என்றவாறு.

     வினை என்றது ஈண்டு முடிக்கும் சொல்லை, "வினைப் படு தொகுதி"
 இ.வி. 315) என்றாற்போல.                                              (5) 

விளக்கம்

     குளகம் என்பது ஒரே முடிக்குஞ்சொற் கொண்டு முடியும் பல பாடல்களின்
 தொகுதியாம். "பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலையே
 வினையென்றார்"

(இ. வி. 315 உரை) 

     குளகத்திற்குத் தண்டியலங்காரம்,

    "முன்புலகம் ஏழினையும் தாயதுவும் மூதுணர்வோர்
     இன்புறக்கங் காநதியை ஈன்றதுவும் - நன்பரதன்
     கண்டிருப்ப வைகியதும் கான்போ யதுமமிர்தம்
     உண்டிருப்பார் உட்கொண் டதும்"

    "வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்
     அந்தச் சிலையினைப்பெண் ஆக்கியதும் - செந்தமிழ்தேர்
     நாவலன்பின் போந்ததுவும் நன்னீர்த் திருவரங்கக்
     காவலன் மாவலவன் கால்"

 என்ற இரு பாடல்களை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளது.

     உலகளந்ததும், கங்கையைத் தந்ததும், பரதற்கு அருளியதும், தேவர்
 உட்கொண்டதும், உத்தரை பெற்ற கரிப்பிண்டத்தைப் பரீட்சித்து என்ற
 குழந்தையாக்கியதும், கல்லினை அகலிகை ஆக்கியதும், திருமழிசைப்பிரான்
 பின் தொடர்ந்து போயினதும் அரங்கப்பெருமான் திருவடியே எனப் பாடல்கள்
 இரண்டும் ஒரே முடிக்குஞ்சொற் கொண்டமைந்தமையின் இவை குளகம்.