[சிவபெருமானுக்கு மேருமலை வில்லாக மேவும்; ஆலம் உணவாக மேவும் ;
அவன் பூதக்கூட்டம் மேம்பட்டு விளங்கும்; அத்தன்மையான் திருவடிகளைச்
சார்வீராக.]
இது குறட்டின் நடுவே 'மே' என்னும் எழுத்து நின்று, ஆரல்மேல்
ஒவ்வோரெழுத்தாக நான்கு எழுத்து நின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து
நின்று செய்யுள் முடிந்தவாறு காண்க.