[வேலை ஏந்திய மன்னர் பலருக்கு தலைவனும், தான் அடையாள மாலையாகத்
தொன்று தொட்டுச் சூடும் ஆத்திப்பூ மாலையை யான் சூடக் கொடுத்தவனும், ஒரு
பெண்ணாகிய திருமகளைப் பெறப் பாற்கடலை மந்திரமலையால் கடைந்தவனுமாகிய
திருமாலின் அமிசமாகிய சோழன், உறுப்புக்களே இல்லாதவனாகிய மன்தன் என்மீது
செலுத்தும் கொடிய கணைகளையும் என் மீது ஏவப் பெறாமல் காப்பனோ?-என்ற
இப்பாடலில், அங்கம் இல்லாதவன் என்று மன்மதனுக்கு அடைகொடுத்துப் பின்
(ந + அங்கன் - அங்கம் இல்லாதவன்) அதே பொருளடைய அநங்கன் என்ற
சொல்லை அடைகொளியாக்கியது, அங்கமில்லாதவனாகிய அங்கமில்லாதவன்
எனக் கூறியது கூறலாகிய வழுவாமாறு காண்க.
சோழநாட்டுப் படைவீரர் போய்க் கலிங்கநாட்டின் மீது படையெடுத்தபோது,
வடநாட்டரசர் ஒவ்வொருவரும் "வருவர் அருவர்" (தமிழ்நாட்டவர்) என்று அவர்கள்
வருகைக்குப் பயந்து, மனம் சுழன்று, "இவ்விடத்தை விட்டு அகல்வாய் அகல்வாய்"
என்று கூறி மனம் தளர்வர் - என்ற இப்பாடலில், தீத்தீத்தீ என்று விரைவுபற்றிக்
கூறியதுகூறல் அமைதியாகக் கொள்ளப்பட்டவாற காண்க. விரைவுபற்றியும்
மும்முறைக்குமேல் அடுக்குதல் கூடாது என்பது சொற்படலத்தில் கூறப்பட்டது.
திரு. மு. இராகவ ஐயங்கார் - தமிழாராய்ச்சித் தொகுதியில் கீழ் வருமாறு
குறிப்பிடப்பட்டுள்ளமை காண்க.