699. யதிவழு என்பது ஓசை அறுவழி
நெறிபட வாரா நிலைமையது ; அதுவே
வகையுளி யாயின் வழுவின்று ஆகும்.
இதுவும் அது.
இ-ள் : யதிவழு என்று சொல்லப்படுவது, ஓசை கொண்டு தளை அறுக்குமிடத்து
அறுத்தற்கு அரிதாய் வேறுபட வரும் தன்மையதாம். அதுவே, வகையுளியாகப்
பிரித்துக் கூறும் இடத்துக் குற்றம் இல்லையாம் என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 113, 114
"நசைதீர் யதிவழு நாடுகில் ஓசை
இசைதர நிகழாது இழுக்குவ தாகும்." - மா. 311
"அதுவே,
வழுவின் றாம்எனல் வகையுளிக் காகும்." - மா. 312
வரலாறு :
"மாடு பயிலும் வரைஆளி, மால்யானைக்
கோடுபுய்த்து உண்டுஉழலும் கொள்கைத்தாம் ; -- காடு