செய்யுள் வழுவும் அமைதியும்
700. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோடு
எய்தல் இல்லா இயல்பினது ; அதுவே
ஆரிடத் துள்ளும், அவைபோல் பவற்றுளும்
நேரும் என்மனார், நெறிஉணர்ந் தோரே.
இதுவும் அது.
இ-ள் : செய்யுள் வழு என்று சொல்லப்படுவது, செய்யுள் இலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினை உடைத்தாம். அதுவே, ஆரிடத்துள்ளும் ஆரிடப் போலியுள்ளும் பொருந்தும் என்று கூறுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 115, 116
["பழுதறப் பகர்ந்த பாட்டின தியல்பு
வழுவுதல் செய்யுள் வழுஎன மொழிப." - மா. 317
"தவதுறு பவரவர் போலுநர் சாற்றலும்
நலமுறப் புனைசெயுள் நடைநவை யிலவே." - மா. 13]
ஆரிடம் என்பன இருடிகளால் சொல்லப்படுவன, அவற்றின் போலியாவன சாவவும் கெடவும் வாழவும் பாடவும் மனத்தது பாடவும் வல்லாரால் பாடப்படுவன.
வரலாறு :
"ஆதாரம் துயர்தர, அயர்தரும் கொடிக்குப்,
பூதலம் புகழ்புனை வளவன் -- தாதகி
தாங்குஅரும்பால் அன்றித் தகையுமோ, தார்அநங்கன்
பூங்கரும்பால் அந்தடர்ந்த போர்?"
எனவும்,
|
|
|