பிறிவார் குணமொன்ற தொன்றிற்கிடப்பன [மென்மையொன்றின்
நெறிவார் குழலி சுகுமாரதை என்று நேர்ந்துரையே". - வீ. 150
"ஆனா உலகிற் கரும்புகழ்க் காந்தி கொடைப்புகட்சி
தானா முதாரம் பொருள்விளக் குஞ்செய்யுள் தான்புலனாம்
தேனார்சொல் லன்றிப் பொருளாற் றெளியின் [பொருட்டெளிவாம்
தானாடு சொற்பொருளிற் சுவைதோன்றின் தகுமின்பமே" - வீ. 151
"ஆனா அழகினைக் காந்தியென் கின்றது அதுதமிழின்டுமே.
நானா விதமாய் நடைபெற்றியலும் நனிபுகட்சி
தானா மிடத்தினும் வார்த்தையின் கண்ணும் தலைசிறந்து
தேனாய் விதர்ப்பருக் குங்கவு டர்க்கும் திறப்படுமே" - வீ. 151 அ
"இன்பம் தெளிவு செறிவுசமன் இன்னிசையே
நன்சொல் உதாரம் நவின்றவலி - மன்காந்தம்
தையல்உய்த் தலில்பொருண்மை சாற்றும் சமாதியுடன்
ஐயிரண்டும் வைதருப்பம் ஆம்" - மா. 80
"ஏனைக் கௌடமிவை ஈரைந் தொடுங்கூடா
மானைப் பழித்த மதர்விழியாய் - நூல்நயந்திங்(கு)
எண்ணியபாஞ் சாலம் இவைகட் கிடைப்பட்டு
நண்ணியதோர் சால்புடைத்தாம் நன்கு". - மா. 81
"சொல்லாற் பொருளாற் சுவையுறலின் பந்தெளிவு
ஒல்காப் பொருள்புலப்பா டொண்செறிவு - நல்லாய்
எழுத்தோ ரினஞ்செறிதல் எல்லா எழுத்தும்
வழுத்தீர்ந் துறல்சமனு மாம்". - மா. 82
"இன்னிசைய தின்னிசையாம் ஏய்ந்த உதா ரங்குறிக்கொள்
சொன்னடையால் வேறுபொருள் தோன்றலாம் - நன்னுதால்
வாய்ந்த தொகைமிக்கு வருதல் வலிகாந்தம்
ஆய்தொன்ற னையுயர்த்தல் ஆம்". - மா. 83