அணியியல் - குணவணி

57 

 அணியியல் - குணவணி

57 



     "செய்யுட் பொருளைத் தெளியவிரித் தற்குரிச்சொல்
     எய்துநடைத் துய்த்த லில்பொருண்மை - தையலாய்
     ஓங்கும் சமாதி உபமேயத் தின்வினையை
     ஆங்குவமைக் கேற்றுவதொன் றாம்".

- மா. 84 

     "சமாதி சிலீட்டம் ஆலேசம் சமதை
     பொருட்டெளிவு இன்பம் புலன்சுகு மாரதை
     உதாரம் காந்திமற்று ஒன்பதும் ஒன்றும்
     வைதருப் பந்நெறி யாம்வழுத் திடினே".

- மு. வீ. செய்யுளணி 11 

     "அவற்றுள்,
     ஒன்றன் பாலுண் டாகிய குணம்மற்று
     ஒன்றன் பாலுள வாக உரைப்பது
     சமாதி எனப்பெயர் சாற்றப் படுமே".

- 12 

     "சிலீட்டம் சொற்செறிவுடைய தாகும்".

- 13 

     "ஆலே சம்தொகை அதிகமா குதலே".

- 14 

     "எழுத்துநான் கடியுமொத் தியல்வது சமதை".

- 15 

     "பொருளா லறிவது பொருட்டெளி வாகும்"

- 16 

    "மொழிதரு முற்றிய மோனையைப் பெறுவன
     இன்பம் என்மனார் இயல்புணர்ந் தோரே".

- 17 

     "உதாரம் ஈகையைப்புகழ்ந் துரைப்பதா மெனலே".

- 18 

     "பொருள்புலப் படல்புல னாமென மொழிப".

- 19 

     "வன்கணம் ஒழிதர வரும்சுகு மாரதை".

- 20 

     "பொருட்பொலி வால்புகழ்ந் துரைப்பது காந்தி".

- 21 

- 15 

கௌடம்

 635. கௌடம் என்பது கருதிய பத்தொடும்
     கூடாது இயலும் கொள்கையது என்ப.


 இது கௌடம் ஆமாறு கூறுகின்றது.