கூறுவதாகச் சொல்லிச் சிற்றில் சிதைந்து அழிந்த வருத்தத்தால் தம் முத்து மாலைகளைஅறுத்தாராக, அம்முத்துக்கள் மணற் பரப்பில் சிதறிப் புன்னை அரும்புகள் போலக் காட்சிஅளித்து அப்பகுதியில் செல்வார் கால்களை உறுத்தும் இயல்பிற்று புகார் நகரம் - என்றஇப்பாடலில், சீர் இடையிட்ட வழி மோனையினால் சொல்லின்பம் அமைந்துள்ளதுகுறித்துணரத்தக்கது.]
இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :
"துனைவருநீர் துடைப்பவளாய்த் துவள்கின்றேன்;
துணைவிழிசேர் துயிலை நீக்கி,
இனவளைபோன்று இன்னலம் சோர்ந்து, இடர்உழப்ப,
இகந்தவர் நாட்டு இல்லை போலும்;
தனியவர்கள் தளர்வுஎய்தத் தடங்கமலம்
தளை அவிழ்க்கும் தருண வேனில்
பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலில்
பரப்பிவரும் பருவத் தென்றல்"
என வரும்.
[தோழி ! வளைசுழல, வனப்பு நீங்க, இடர் உழந்து விரைந்து வரும் கண்ணீரைத் துடைத்துவாடுகிறேன். தனித்திருப்பார் கண்டு தளரும்படி தாமரை அரும்பும் இளவேனிற் காலத்தில்மகரந்தத்தைச் சோலைகளில் பரப்பியவாறு நம் பகுதியில் வீசும் தென்றல், நம்மைப் பிரிந்துதலைவன் சென்றுள்ள வேற்று நாட்டில் வீசாதோ? - என்று தலைவன் பிரிவால் இளவேனிற்காலத்தில் வருந்திய தலைவி தோழிக்குக் கூறிய இப்பாடலில், அடிதோறும் சீர்களில் மோனைசிறந்து வரத் தொடுத்துள்ளமை கௌடச் சொல்லின்பமாம்.
இனி, இதனைப் பாஞ்சாலச் சொல்லின்பத்துக் கொண்டு, சீர்தோறும் முற்றுமோனையும் அடிதோறும் வருக்க மோனையும் அமையப் பாடுவதே கௌடச் சொல்லின்பம்என்று மாறன் அலங்கார நூலார் கூறுவர். |
|
|