"கடுவே கயல்எனக் கரந்துஅடும் கண்ணினை
காமனும் காமுறும் காட்சிய காண்முகம்
கிள்ளையின் கிளையும் கிளைத்தகைக் கிளையுடைக்
கீரமும் கீர்த்தி கீரமும் கீரே
குவடுஉடைக் குளிர்பொன் குன்றே குவிமுலை
கூர்புதற் கூன்சிலை கூற்றுயிர் கூட்டுணும்
கெடல்அருங் கெழுதகை கெழுமுபு கெழீஇய
கேகயம் கேளொடும் கேடுஉறும் கேழ்இயல்
கைபுனை கைக்குஇசை கைக்குஇணை கைத்துணை
கொண்டல்உள் கொண்டன்ன கொண்டையும் கொடியுடை
கோடாக் கோவலர் கோற்றொடி கோமான்
கௌரவ கௌசிகள் கௌசிகம் கௌத்துவம்
மணிஎனக் கொண்டு மனவீடு அளித்தோன்
கண்ணன் குறுங்குடிக் கனவரை
மண்ணகத்து உறையுளாய் வளர்நில மகட்கே"
தலைவன் பாங்கற் கூட்டத்தில் தலைவி இயல் இடம் கூறிய இப்பாடலைக் கௌடநெறிச் சொல்லின்பத்துக்கு அவர் எடுத்துக் காட்டாகத் தந்துள்ளார்.]
பொருள் இன்பம் வருமாறு :
"மான்நேர் நோக்கின் வளைக்கை ஆய்ச்சியர்
கானம் முல்லை சூடார்; கதுப்பில்
பூவைப் புதுமலர் சூடித் தாம்தம்
அடங்காய் பணைமுலை இழைவளர் முற்றத்துச்
சுணங்கின் செவ்வி மறைப்பினும், மலர்ந்த
பூவைப் புதுமலர் பரப்புவர்; பூவயின்
ஆநிரை வருத்தம் வீட, மலைஎடுத்து,
மாரி காத்த காளை
நீல மேனி நிகர்க்குமால் எனவே"
என வரும். இப்பொருள் இன்பம் இருநெறிக்கும் ஒக்கும். பொருள் இன்பமாவது, மதுக்காரணமாக மதுகரங்களுக்கு வருவது ஒரு மகிழ்ச்சி போலப் பொருள் |
|
|