காரணமாக அது கேட்டார்க்கு வருவது ஒரு மகிழ்ச்சி. இவ்வாறு தொடுக்குங்கால் கிராமியச்சொல்லும் பொருளும் தீண்டாமல் தொடுத்தல் வேண்டும் எனக் கொள்க.
[ஆய்ச்சியர் தம் முல்லை நிலத்து மிக்குக் காணப்படும் நறுமணமுடைய முல்லையைச்சூடாது, மலையைக் குடையாகக் பிடித்து ஆனிரைகளைக் காத்த கண்ணனுடைய மேனி நிறத்தைஒக்கும் பூவைப் பூக்களையே அவன் நினைப்பை மிகுவித்தல் காரணமாகச் சூடுவர் - என்றஇப்பாடலில் கற்பனை நலன் சிறக்கும் பொருளின்பம் சுட்டப்பட்டுள்ளது. இப்பொருளின்பத்தை இரு நெறியாரும் வேண்டுவர்.]
வெறுத்து இசை இல்லா ஒழுகு இசை வருமாறு :
"இமையவர்கள் மௌலி இணைமலர்த்தாள் சூடச்
சமையந்தொறும் நின்ற தையல், - சிமைய
மலைமடந்தை, வாச மலர்மடந்தை, எண்ணெண்
கலைமடந்தை, நாவலோர் கண்"
என வரும்.
[தேவர்கள் தன் திருவடிகளை வணங்குமாறு எல்லாச் சமயத்தாராலும் வழிபடப்படும்தேவியாய் மலைமடந்தையாகவும் திருமடந்தையாகவும் கலைமடந்தையாகவும் விளங்குபவள்,புலவர்களுக்குப் பற்றுக் கோடாய் உள்ளாள் - என்ற இப்பாடலில் கடுஞ்சொற்கள் அமையாதுஒழுகிசை அமைந்தமை வைதருப்ப நெறியார் மரபை உட்கொண்டது. இவ்வொழுகிசை இருநெறியாருக்கும் ஒக்கும் என்பது தண்டியார் கருத்து என்ப.
இவ்வொழுகிசையை இன்னிசை என்று பெயரிட்டு, தூங்கிசைச் செப்பலோசையைவைதருப்பத்திற்கும், ஏந்திசைச் செப்பலோசையைக் கௌடத்திற்கும், ஒழுகிசைச்செப்ப லோசையைப் பாஞ்சாலத்திற்கும் உரியவாகக் குறிப்பிடும் மாறன் அலங்காரம் மூன்றுவிகற்பமும் மூன்று நெறியாருக்கும் உரிய என்று கொள்ளும்பிறன்கோளையும் குறிப்பிட்டுள்ளது.] |
|
|