அணியியல் - குணவணி

67 

 குழவிச் செல்வத்தை உடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக; அஃதன்றி
 எம்மிடத்துக்காண்டல் அரிது என்றவாறு.

     "காழில்...மூழிக்களம்" எனவே, அக்கடுவன்போல, உத்தமமான இவளோடும்,
 உள்ளும்புறம்பும் ஒரு நீர்மைத்தாம் மென்மையோடும், உவர்ப்பில்லாத
 பேரின்பத்தைத் துய்த்ததலைவன், இழிந்த இயற்கையை உடையராய்ப் புறம்பு பொருள்
 நசைக்காய்ச் சிறிது நெகிழ்ந்துஉள் நெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே உவர்த்த
 சிற்றின்பத்தைத் துய்த்து அவ்வின்பம் மீண்டும்துய்ப்பான் அவர் சேரிவிட்டு
 நீங்கானாயினான் என உள்ளுறை உவமம் குறிப்பிற்கொள்ளக்கிடந்தமையானும்,
 காமக்குழவி வளர்த்தாரிடம் எனவே, இஃது எம் காதற்புதல்வன்என்னும் செல்வத்தை
 உடைய மனை என்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையேம்என்பதூஉம் இன்னும்
 அவ்விலேசானே எம்மிடத்து அவர் பெறும் இன்பம் எமக்கு அவர்கொளுத்தக்
 கொண்டு யாம் கொடுக்கும் இயற்கை இன்பமே அல்லாது செயற்கை இன்பம்எம்மிடத்து
 இல்லையே என்னும் கூற்றுமாகக் குறிப்பும் கூற்றும்
 குறிப்பினால்கொள்ளக்கிடந்தமையானே, இவ்வாறு வேண்டுவர் கௌடர் எனக் கொள்க.

     கருதிய பொருளைத் தெரிவுஉற விரித்தற்கு உரிய சொல் உடைய உய்த்தலில்
 பொருண்மைவருமாறு:

    "இன்றுஉமையாள் மாசுஇலா வாள்முகம்கண்டு ஏக்கற்றோ,
     அன்றி விடஅரவை அஞ்சியோ? - கொன்றை
     உளரா ஆறுஒடும் ஒளிர்சடையீர் ! சென்னி
     வளராஆறு என்னோ? மதி"

 என வரும்.

     [கொன்றைப்பூவில் பாய்ந்து கங்கை ஓடும் சடைமுடியை உடைய சிவபெருமானே!
 உங்கள்சென்னியில் உள்ள பிறைச்