உலகு ஒழுக்கு இறவா உயர்புகழ்க் காந்தம் வருமாறு :
"ஒருபேர் உணர்வுடையேன் உள்நிறையும் தேய
வருமே துறவுஎன்பால் வைத்த - ஒருபேதை,
போதுஅளவு வாசப் புரிகுழல்சூழ் வாள்முகத்துக்
காதுஅளவு நீண்டுஉலவும் கண்?
என வரும்.
[உணர்வுடைய என்னுடைய உள்ளத்து நிறையும் தேய, நிறைநீங்குதலை உண்டாக்கிய இளையாளது குழல் சூழ்ந்த ஒளி மிக்க முகத்தில் அமைந்த கண்கள் காதுகள் அளவும் நீண்டு பிறழும் இயல்பின - என்று தலைவன் தான் உற்ற வருத்தத்தைப் பாங்கனிடம் கூறிய இப்பாடலில், உலகியலில் நிகழும் செய்தியே மரபாக அமைந்த புனைந்துரையே அமைந்திருப்பதனைக் காணலாம்]
இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :
"ஐயோ! அகல்அல்குல் சூழ்வருதற்கு ஆழித்தேர்
வெய்யோற்கு அநேகநாள் வேண்டுமால்; - கைபரந்து
வண்டுஇசைக்கும் கூந்தல் மதர்விழிகள் சென்றுஉலவ,
எண்திசைக்கும் போதாது இடம்"
என வரும்.
[இஃது என்ன வியப்பு! அகன்ற அல்குலைச் சூழ்ந்து சுற்றி வருவதற்குக் கதிரவனுக்குப் பல நாட்கள் ஆகும். இந்நங்கையின் செழித்த விழிகள் உலவி வருவதற்கு எட்டுத் திசைகளும் இடம் போதாவாம் - என்ற இப்பாடலில் உலக நடையினைக் கடந்த கற்பனை அமைந்திருப்பது காண்க.]
தொகைமிக உரூஉம் தகைமிகு வலி வருமாறு :
"செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கின் சீறடிப்பேர்ப்
பொங்கரவ அல்குல் பெருகயல்கண் . செங்கனிவாய்க் |
|
|