[கொடை வழங்கும் கார்மேகம் போன்ற நீண்ட கையினையும், நேரிய வீரக்கழல்
அணிந்த காலினையும், பெருமை பொருந்திய வேலினையும் உடைய சோழ
மன்னனுடைய உட்டொளையுடைய நீண்ட துதிக்கையினையும் தொங்குகின்ற
வாயினையும் உடைய யானை, தன் கால்களை உயரத் தூக்கினால், அதன் கால்களைப்
பிணித்திருக்கும் சங்கிலியின் கணுக்கள் மட்டும் அறுதலேயன்றிப் பகைவருடைய
மான் போன்ற மனைவிமார்களின் மங்கல நாண்களும அறுபடும் - என்ற
யானைமறம் பற்றிய இப்பாடலில்,
கால் நிமிர்த்தல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
புல்லாதார் மானனையார் - ஆறாம் வேற்றுமைத்தொகை
மான் அனையார் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
அனையார் மங்கலநாண் - ஆறாம் வேற்றுமைத்தொகை
மங்கல நாண் - பண்புத்தொகை
தானக்கை - இரண்டாம் வேற்றுமைத்தொகை
மழைக்கை - உவமைத்தொகை
கழற்கால் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
வேற்கிள்ளி - இரண்டாம் வேற்றுமைத்தொகை
புழைக்கை - இரண்டாம் வேற்றுமைத்தொகை
கைப்பொருப்பு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
நால்வாய் - வினைத்தொகை
வாய்ப்பொருப்பு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
சொற்களில் உருபு தொகுதலோடு பொருளும் தொக்கு அமைதல்
கௌடநெறியாரின் வலி என்று கொண்ட இவ்வாசிரியர் இப்பாடல் அடிகளின்
பொருளமைப் நோக்கி, இதனைக் கௌட நெறிக்கு எடுத்துக்காட்டாக்கினார்.]