எனவும் சாதிக்கு ஏற்ற உவமையும்,
செம்பருத்தியும் கரவீரமும் கூறாது, "கயிரவம் போலும் செவ்வாய்" "பவளம்
போலும் செவ்வாய்" எனக்கூறும் மரபிற்கு ஏற்ற உவமையும் பிறவாறும் உணர்தலும்
பிறவும் ஆம்.
உவமை எனினும், உவமானம் எனினும், பொருள் எனினும் உவமேயம் எனினும்
ஒக்கும். 20
[பாலை நிலத்தில் செல்லும் பாடினியின் கால்களில் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு
அந்நிலத்தில் உள்ள மரல் என்ற செடியில் பழுக்கும் பழங்களை உவமை கூறியது
இடத்திற்கு ஏற்ற உவமையாம்.
கார் காலத்தில் தோன்றும் இந்திர கோபப் பூச்சிகளை நெருப்பிற்கு
ஒப்பிட்டுள்ளமை காலத்திற்கு ஏற்ற உவமையாம்.
எல்லையிட முடியாத பரம்பொருளின் கரிய நிறத்திற்குக் கடலின் கரிய
நிறத்தையும் மலையின் கரிய நிறத்தையும் உவமை கூறியது பொருளுக்கு ஏற்ற
உவமையாம்.சேற்றில் வளரும் தாமரையாகிய நூறு இதழ்களை உடைய பூக்களின்
வரிசைபோல வேறுபாடறியாத மேம்பட்ட குடும்பத்தில் பிறந்து சிறப்புற்றிருப்பவர்
என்ற தொடரில், மேம்பட்ட குடிப்பிறந்தோருக்கு மேம்பட்ட தாமரை மலர்கள்
சாதிக்கு ஏற்ற உவமையாகும்.