செய்யுளியல் - நூற்பா எண் 19, 20

105

 
 

முழுதும் - யா. வி. 55

 

 

`ஒன்றும் இடைச்சீர் வருஞ்சீ ரொடுமுதற் சீர்கள்தெற்றும்
என்றும் அளவடி ஈற்றடி அல்லன; ஈற்றடியும்
நன்று மலர்காசு நாள்பிறப் பென்றிற்ற சிந்தடியே;
`துன்றும் கடைச்சீர் புகாஎன்பர் வெள்ளையில் தூமொழியே.'
 
 

- வீ. சோ. 113

 
  `வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி
ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி
ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்.'
 
 

- தொ. வி. 220

 
  `வெள்ளையுள் பிறதளை விரவா; வெண்டளை
ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம்; அஃதே
ஏந்திசை வெண்சீர், இயற்சீர் தூங்கிசை,
ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்.'
 
 

- தொ. வி. 221

 
  `வெண்பா அளவடி வேண்டப் படுமே.'  
 

- மு.வீ. யா.செ.1

 
(19)

வெண்பாவகை

729. குறளே நேரிசை இன்னிசை பஃறொடை
சிந்தியல் எனஅஃது ஐந்துஎன மொழிப.
 
     
இது மேல் பொதுவகையான் கூறிய வெண்பா வகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : குறள் வெண்பாவும் நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்
பஃறொடை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் என்று முற்கூறிய வெண்பா ஐந்து
வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
(20)

விளக்கம்

     குறள் 2 அடி, நேரிசை இன்னிசை 4 அடி, பஃறொடை 5-12 அடி, சிந்தியல் 3
அடி, என அடிபற்றி ஐந்து பகுப்பாக வரையறுத்தவாறு.