| `நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே குறுவெண் பாட்டின் அளவுஎழு சீரே.ழு | | | - தொ. பொ. 470 | | |
| `குறள்சிந்து இன்னிசை நேரிசை பஃறொடை எனஐந் தாகும் வெண்பாத் தானே.ழு | | | - யா. வி. 58 | | |
| `குறள்சிந்து இன்னிசை நேரிசை சவலை பஃறொ டைஎன வெண்பா ஆறு.ழு | | | - தொ. வி. 222 | 20 | |
வெண்பாவகை இலக்கணம் |
730. | ஈரடி யான்வரின் குறள்; அஃது இரண்டாய்ச் சீரிய வான்தனிச் சொல்இடை சிவணி இருவிகற் பானும், ஒருவிகற் பானும் செப்பல் ஓசையின் சிதையா தாகி அத்திறம் வரின்நே ரிசை ;அடி நான்காய் ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் இன்னிசை; அடிபல துன்னின் பஃறொடை; நேரிசை இன்னிசை அன்னவாய் மூன்றடி யான்வரின் சிந்தியல் வெண்பா; ஆதலும் விதிஎனப் படுமே. | | | | | |
இது முற்கூறிய வெண்பாக்கள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : ஈரடியான்வரின் குறள் வெண்பா ஆதலும், அக்குறட்பா இரண்டாய்த் தொடைக்கு ஏற்ற தனிச் சொல் இடைக்கண் பொருந்தி முதல் இரண்டு அடியும் ஒரு விகற்பத்தானும் கடை இரண்டு அடியும் ஒரு விகற்பத்தானும் நான்கு அடியும் ஒரு விகற்பத்தானும் |