செய்யுளியல் - நூற்பா எண் 21

107

 
செப்பல் ஓசையின் வழுவாது அவ்வாறு வரின் நேரிசை வெண்பா ஆதலும், நான்கு
அடியாய் ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் தனிச் சொல் இன்றி வரின்
இன்னிசை வெண்பா ஆதலும், மேல் வெண்பாவிற்கு நான்கடி உரிமை கூறினமையின்
நான்கு அடியின் மிக்கு ஒரு விகற்பாயும் பல விகற்பாயும் அடி பலவாய் வரின்
பஃறொடை வெண்பா ஆதலும், நேரிசை வெண்பாவே போல இரண்டாம் அடி இறுதி
தனிச்சொல் பெற்று இரு விகற்பாயும் ஒரு விகற்பாயும் மூன்று அடியாய் வரின்
நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆதலும் இன்னிசை வெண்பாவேபோல ஒரு விகற்பாயும்
பல விகற்பாயும் தனிச்சொல் இன்றி மூன்று அடியாய் வரின் இன்னிசைச் சிந்தியல்
வெண்பா ஆதலும் இலக்கணம் எனப்படும் என்றவாறு.

     மேல் வெண்பாச் செப்பல் ஓசைத்தாய் வரும் எனக் கூறி ஈண்டும் செப்பல்
ஓசையின் சிதையாது என்றது-ஒருசார் பிற பாக்களை உதாரண வாய்பாட்டான் ஓசை
ஊட்டும் இடத்துத் தத்தம் ஓசையின் சிறிது வழுவி வருவன உள ஆயினும்,
வெண்பாவிற்குச் செப்பல் ஓசை சிறிதும் வழுவல் ஆகாது என்று யாப்புறுத்தல்
பொருட்டாகவும், செப்பல் ஓசையில் சிறிது வழுவிவந்த நேரிசை இன்னிசை
வெண்பாக்களை ஒருபுடை ஒப்புமை நோக்கி வெண்துறைப்பாற்படுத்தும், செப்பல் ஓசை
சிறிது வழுவிவந்த பஃறொடை வெண்பாக்களை ஒருபுடை ஒற்றுமை நோக்கி
வெண்கலிப்பாற்படுத்தும் வழங்கினும் இழுக்காது என்பது அறிவித்தற்கும் எனக் கொள்க.

     `சீரியவான் தனிச் சொல்' என்ற மிகையானே முதல் குறட்பாவினோடு தனிச்சொல்
இடைவேறுபட்டு விட்டுஇசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை