விளக்கம் |
உதாரணப் பாடல்களுக்கு ஒத்த சிதம்பரச் செய்யுட்கோவைப் பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக உளங்கொளத்தக்கன ஆதலின் அவற்றை நிரலே காண்பாம். |
இருவிகற்பக் குறள் வெண்பா : |
| `அறனன்று மாதவ னென்ப துலகெந்தை தாள்காணார் நாணுக் கொள.' | | | - 2 | | |
ஒருவிகற்பக் குறள் வெண்பா : |
| `பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக ஆங்கொன்றைக் கண்ணி யவர்.' | | | - 1 | | |
இருவிகற்ப நேரிசை வெண்பா : |
| `கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள் இறைவி நறுநுதலைக் கண்டு ;- பிறைமுடியோன் கைம்மான் நடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும் ; அம்மான் விழிமானைக் கண்டு.' | | | - 5 | | |
ஒருவிகற்ப நேரிசை வெண்பா : |
| `திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு ; திருமார்பில் ஆரமும் பாம்பு ; - பெருமான் திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு ; பொருபுயத்தில் கங்கணமும் பாம்பு.' | | | - 4 | | |
இருவிகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா : |
| `நீரில் குமிழி இளமை; நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் ; - நீரில் எழுத்தாகும் யாக்கை; நமரங்காள் என்னே? வழுத்தாத தெம்பிரான் மன்று.' | | | - 9 | | |