116

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

இருவிகற்பத்து ஓர் ஆசிடை நேரிசை வெண்பா:

 

`வரத்தின் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல்
கரத்தில் கபாலத்தைக் காணூஉப் - புரத்தை
இரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான்,
அரும்புண்ட ரீகத் தயன்.'
 
 

- சி. செ. கோ. 7

 

ஒருவிகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா :

 

`கூற்றம் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்
தோற்றம் துடைத்தேம் துடைத்தேமால்; சீற்றஞ்செய்
ஏற்றினான், தில்லை இடத்தினான், என்? இனியாம்
போற்றினால் நல்கும் பொருள்.'
 
 

- 8

 

ஒருவிகற்பத்து ஓர் ஆசிடை நேரிசை வெண்பா :

 

`வணங்கு சிறுமருங்குல்பரமர்க்கண் மாதர்
அணங்கு புரிவ தறமால் ; - பிணங்கி
நிணங்காலும் முத்தலைவேல் நீள்சடைஎங் கோமாற்
கிணங்காது போலும் இரவு.'
 
 

- 6

 

ஒருவிகற்பத் தின்னிசை வெண்பா :

 

`வாழி திருமன்றம் கண்ட மலர்க்கண்கள் ;
வாழி பெருமாள் புகழ்கேட்ட வார்செவிகள் ;
வாழி அவனை வணங்கு முடிச்சென்னி ;
வாழிஅவன் சீர்பாடும் வாய்.'
 
 

 - 10

 

இருவிகற்பத் தின்னிசை வெண்பா :

 

`புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி, நின்று,
வனசங்காள் செய்ததவம் வாழியரே ! வாழி !
பொருவிடையோன் தெய்வப் புலியூரை ஒப்பாள்,
திருமூகத்துக் கொப்பச் செயின்.'
 
 

- 12