செய்யுளியல் - நூற்பா எண் 21

117

 

பலவிகற்பத் தின்னிசை வெண்பா :

 

`ஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா,
ஓஒ பெரிதும் அரிதே ! எளிதேயோ !
வேதந் துறைசெய்தான், மெய்துணியான், கைதுணிந்தான் ;
பேதுற்றும் வெஃகேம் பிற.'
 
 

- சி. செ. கோ. 13

 

இரண்டாமடியிறுதி தனிச்சொல் பெற்று மூன்றுவிகற்பத் தான்வந்த
இன்னிசை வெண்பா :

 

`ஆடகச் செம்பொன் அணிமன் றிடங்கொண்ட
பாடகச் சீறடியாள் பாகத்தான், - சூடகக்கைக்
கங்கையாள் கேள்வன், கழல்தொழூஉக் கைகூப்பி,
நின்றிறைஞ்சச் சென்றிறைஞ்சும் கூற்று.'
 
 

- 15

 

மூன்றாமடியிறுதி தனிச்சொல் பெற்று இருவிகற்பத்தான் வந்த இன்னிசை
வெண்பா :

 

`காதல் மகளிர் கலக்கக் கலககுண்டு,
பேதுற்றார் நெஞ்சும், பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்,
போதம் படரும் புலியூரே, - தாதுண்டு,
வண்டுறங்கும் நீள்சடையோன் வைப்பு.'
 
 

- 16

 

அடிதொறும் தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தான் வந்த இன்னிசை
வெண்பா :

 

`காமர் உயிர்செகுக்கும் கண்ணொன்றே - காமருசீர்
மாதர் நலனழிக்கும் கண்ணொன்றே - மாதருக்
கின்னா இரவொழிக்கும் கண்ணொன்றே - இந்நிலத்தில்
தன்னே ரிலாதான் தனக்கு.'
 
 

- 17

 

ஒருவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா :

 

`செக்கர் சடையில் பசுங்குழவி வெண்டிங்காள் !
முக்கண் ஒருவற்கு, நின்னோ டிருசுடரும்,
ஒக்க விழித்தலால் உய்ந்தேம்; ஒருநீயே
அக்கண் ஒருமூன்று மாயின், மற் றுய்வுண்டோ?
மைக்கண் மடவார் உயிர்க்கு.'
 
 

- 18