செய்யுளியல் - நூற்பா எண் 21

119

 

பல விகற்பத்து ஏழடிப் பஃறொடை வெண்பா :

 

`வண்டும் சுரும்பும் ஞிமிறும் குடைந்தார்ப்பத்
தண்டேன் நிறைக்கும் இதழி நறுங்கண்ணி
எண்டோள்முக் கண்ணான் இமயம் புனைமன்றில்,
அண்டர் கண்களிப்பத் தொண்டர் அகம்குளிர்ப்ப,
நின்றாடும் ஆடற் குருகா திருத்திரால் ;
வன் திண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும்
அன்றும் உருகீர்கொல் லாம்.'
 
 

- சி. செ. கோ. 23

 

இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா :

 

`கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த
அம்பொற் புயத்தாற் கமைந்ததால்; - அம்பை
முலையானைக் கோடணிந்த மார்பு.'
 
 

- 25

 

ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா :

 

`கங்கைக்குக்கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயல்என்னே? - எங்கோமான்
பங்குற்றும் தீராப் பசப்பு.'
 
 

- 24

 

ஒரு விகற்பத்து இன்னிசைச் சிந்தியல் வெண்பா :

 

`போற்றுமின், போற்றுமின், போற்றுமின், போற்றுமின்,
கூற்றம் குமைக்க வருமுன், நமரங்காள் !
ஏற்றுவந்தான் பொற்றாள் இணை.'
 
 

- 26

 

இருவிகற்பத்து இன்னிசை வெண்பா :

 

`உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த ;
தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த;
பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து.'
 
 

- 27

 

பல விகற்பத்து இன்னிசைச் சிந்தியல் வெண்பா :

 

`கருமிடற்றன், செஞ்சடையன், வெண்ணீற்றன், என்னும்,
மழுவலத்தன், மானிடத்தன் என்னும்; - உழுவலத்த
மன்றுடையான் தார்வேட்ட மான்.'
 
 

- 28