120

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     வெண்பாக்களின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கனுள் ஒன்றாய்
இருத்தலை இக்காட்டிய எடுத்துக் காட்டுக்கள் வாயிலாகவும் உணரலாம்.

     `சுரையாழழு என்ற சிந்தியல் வெண்பாவிற்கு,

     `கரையாடக் கெண்டை கயமாட மஞ்ஞைழு

     என்ற முதலடியைக் கூட்டி அதனை இருவிகற்ப நேரிசை வெண்பாவாகக்
கொள்வாரும் உளர்.

ஒத்த நூற்பாக்கள்

 

`தொடைஒன்று அடிஇரண் டாகி வருமேல்
குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே.ழு
 
 

- காக்கை.

 

 

`ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே.ழு  
 

- அவிநயம்

 

 

`ஐம்பெருந் தொடையி னினக்குறள் விகற்பம்
செந்தொடை விகற்பொடு செயிர்தீர் ஈரடி.ழு

`நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்துமென்று
ஈரடி முக்கால் இருவகைப் படுமே.ழு

`இரண்டாம் அடியின் ஈறுஒரூஉ எய்தி,
முரண்ட எதுகைய தாகியும், ஆகாதும்,
இரண்டு துணியாய், இடைதனில் போழ்ந்து,
நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா.ழு
 
 

- காக்கை.

 

 

`குறட்பா இரண்டவை நால்வகைத் தொடையாய்,
முதற்பாத் தனிச்சொலின் அடிமூய், இருவகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா.ழு
 
 

- அவிநயம்

 

 

`இருகுறள் நடுவண் தனிச்சொல் பெற்று,
இரண்டொன் றாசும் அவணிடை யிட்டு
ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும்
நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும்.ழு