செய்யுளியல் - நூற்பா எண் 21 | 123 | | | | `ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய் நின்றபதின் மூன்றொன்பா னேரொத்து - நன்றியலும் நீடுசீர் மூவைந்தாம் நேரிசைவெண் பாவென்பர் நாடுசீர் நாப்புலவர் நன்கு.' | | | - வீ. சோ. 114 மேற். | | | | `ஒன்றும் பலவும் விகற்பாகி நான்கடியும் நின்ற தனிச்சொல்தாம், பெற்றும் பெறாதொழிந்தும் தன்னிசைய நேரிசையில் வேறாய், வருமாகில் இன்னிசைவெண் பாவாமென் றார்.' | | | - வீ. சோ. 114 மேற். | | | | `ஈரடி குறளே, இருகுறள் சவலை, இருகுறள் இடைக்கூன் இயைநே ரிசையே, நாலடி விகற்ப நடைஇன் னிசையே, நேரிசை இன்னிசை நேர்மூ வடிசிந்தே, நாலடி மிக்கடி நண்ணிய பஃறொடை, எனஅறு வெண்பா ஏற்கும் நடையே.' | | | - தொ. வி. 222 | | | | `உரத்தெழு செப்பல் ஓசையைத் தழுவி, இரண்டடி யாயீற் றடிமுச் சீராய் ஒருவிகற் பானும், இருவிகற் பானும், வருவது குறள்வெண் பாவெனப் படுமே.' | | | - மு. வீ. யா.செ.2 | | | | `இடையில் தனிச்சொல் பெற்றிரு குறளாய், ஒருவிகற் பானும், இருவிகற் பானும், வருவது நேரிசை வெண்பா ஆகும்.' | | | - மு. வீ. யா.செ.3 | | | | `தனிச்சொல் இன்றி ஒருவிகற் பானும், தனிச்சொல் இன்றி இருவிகற் பானும், தனிச்சொல் இன்றிப் பலவிகற் பானும், தனிச்சொல் பெற்றுப் பலவிகற் பானும், தனிச்சொல் மூன்றாம் அடியில் தழுவி இருவிகற் பானும், வருவதுஇன் னிசையே.' | | | - மு. வீ. யா.செ.4 | | | |
|
|
|