124

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`அடியடி தோறும் தனிச்சொல் பெற்று
வருவதும் அதன்இயல் பாமென மொழிப.ழு
 
 

- 5

 

 

`நேரிசை போல இரண்டாம் அடியில்
தனிச்சொல் பெற்றுஒரு விகற்பத் தானும்,
தனிச்சொல் பெற்றுஇரு விகற்பத் தானும்,
மூன்றடி யாக முடிவது நேரிசைச்
சிந்தியல் என்மனார் தெளிந்திசி னோரே.ழு
 
 

- 6

 

 

`இன்னிசை போலத் தனிச்சொல் இன்றி,
ஒருவிகற் பானும், பலவிகற் பானும்
வருவது இன்னிசைச் சிந்திய லாகும்.ழு
 
 

- 7

 

 

`இருகுறள் சவலை ஒருவிகற் பாகும்.ழு  
 

- 8

 

 

`பாதம் பலவரின் பஃறொடை யாகும்.ழு  
 

- 9

 

 

`அடிவரை இன்றித் தனிச்சொல் பெற்றும்
பெறாதும் வருவது கலிவெண் பாவே.ழு
 
 

 - 10

 

 

`நேர்நாள்; நிரைமலர்; தேமாக் காசு;
புளிமாப் பிறப்பு; எனப் புகலப் படுமே.ழு
 
 

 - 11

 

 

`செப்பல் ஓசையில் சிறக்கும்வெண் பாவே.ழு  
 

 - 12

 

 

`ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை எனஒரு
மூன்று வகைப்படும் மொழியுங் காலே.ழு
 
 

 - 13

 

 

 

`வெண்சீர் வெண்டளை யான்வரும் பாவே
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்.ழு
 
 

 - 14

 
 

 

`இயற்சீர் வெண்டளை யான்வரும் பாவே
தூங்கிசை யாமெனச் சொல்லப் படுமே.ழு
 
 

 - 15

 

 

`வெண்சீர் இயற்சீர் விரவி ஒழுகுவது
ஒழுகிசை என்மனார் உணர்ந்திசி னோரே.ழு
 
 

 - 16

 
 

21