130

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

ஈற்றடி ஒருசீர் குறைந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் :

 

`உருவலன், அருவலன், ஒருவன்,மற் றிருவருக்கு
அரியவன் எனஉணர்ந் தறைகுநர் அறைகமன்;
பரவைதன் மனைவயின், பாவலன் ஏவலின்,
இருமுறை திரிதலி னெளியனென் றெளியனும்
பரவுவன் மன்றம் பணிந்து.'
 
 

 - சி. செ. கோ. 38

 

மூன்றடியான் வந்த வெளிவிருத்தத்திற்குச் செய்யுள் :

 

`அங்கட் கமலத் தலர்கமல மேயீரும், - நீரேபோலும்
வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரும், - நீரேபோலும்
திங்கட் சடையீரும், தில்லைவனத் துள்ளீரும் - நீரேபோலும்.'
 
 

- 39

 

நான்கடியான் வந்த வெளிவிருத்தத்திற்குச் செய்யுள் :

 

`வெஞ்சமன் அஞ்ச வேலொடு எதிர்ந்தால் - நமரங்காள்
அஞ்சல் எனுஞ்சொல் ஆர்சொல வல்லார்? - நமரங்காள்
மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர்; நமரங்காள்
நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ! நமரங்காள்.'
 
     

ஒத்த நூற்பாக்கள்

 

`ஈரடி முக்கால் இசையினும் தளையினும்
வேறுபட் டியல்வன வெண்டா ழிசையே.'
 
     

 

`தன்பா அடித்தொகை மூன்றாய் இறும்அடி
வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
தன்பா இனங்களின் தாழிசை ஆகும்.'
 
 

- காக்கை

 

 

`அடிமூன் றாகி வெண்பாப் போல
இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை.'
 
 

- சிறுகாக்கை

 

 

`அடிமூன்றாகி வெண்பாப் போல
இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை.
 
 

 - அவிநயம்

 

 

`ஈரடி முக்கால் இசைகொள நடந்து
மூன்றுடன் அடுக்கித் தோன்றின்ஒத் தாழிசை.'
 
 

- மயேச்