134

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே;
எம்மில் அயலது ஏழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே'
 
 

 - குறுந். 138

 
என ஏயும்,

 

`குவளை உண்கண் இவள்வயின் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா ;
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ'
 
 

- யா. வி. 69 மே.

 
என ஈயும்,

 

`முள்ளி நீடிய முதுநீர் அடைகரை
புள்ளிக் கள்வன் ஆம்பல் அதுக்கும்
தண்துறை ஊரன் அளிப்பவும்,
உண்கண் சிவப்பது எவன்கொல் அன்னாய்!'
 
 

- யா. வி. 69 மே; ஐங்குறு 21

 
என ஆயும்,

 

`அலந்த மஞ்ஞை யாமம் கூவும்
புலந்தது மாதோ! புரவலர்க் கிரவென'
 
 

 - யா. வி. 69 மே; பெருங்கதை

 
என எனவும்,

 

`நின்றன நின்று தன்துணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் தேந்தழை இவைஎனக்
காட்டவும், காண்டல் செல்லாள், கோட்டுப்
பூண்முலை நோக்கி, இறைஞ்சி,
வாண்முக எருத்தம் கோட்டினள், மடந்தை'
 
 

- யா. வி. 69 மே.

 
என ஐயும் ஈறாயவாறு காண்க. பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. (23)