136

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`நேர்ஒன்று ஆசிரி யத்தளை யான்வரல்
நேரிசை அகவல் எனப்படும் எனலே.'
 
 

- மு.வீ.யா.செ. 31

 

 

`நிரைஒன்று ஆசிரி யத்தளை யான்வரல்
தூங்கிசை அகவல் எனச்சொலப் படுமே.'
 
 

- 32

 

 

`இவ்விரு தளையும் பிறவும் மயங்கி
வருவது ஒழுகிசை யாம்வழுத் திடினே'
 
 

-33

 

ஆசிரியப்பா வகை
 

733.

நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே
அடிமறி மண்டிலம் எனநான்கு அகவல்.
 
     
இது மேல் பொதுவகையான் கூறிய ஆசிரியப்பாவகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : நேரிசை ஆசிரியப்பாவும் இணைக்குறள் ஆசிரியப்பாவும் நிலைமண்டில்
ஆசிரியப்பாவும் அடிமறி மண்டில ஆசிரியப்பாவும் என நான்கு வகைப்படும்
ஆசிரியப்பா என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

 

`நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம்
ஈரிரண்டு இயல எண்ணுங் காலை.'

`நேரிசை இணைக்குறள் மண்டில நிலைப்பெயர்
ஆகுமண் டிலமுமென்று அகவல் நான்கே.'
 
 

 - யா. வி. 70

 

 

`ஆசிரி யத்துஒலி அகவலாய் இயற்சீர்
தன்தளை பிறவும் தழுவிய அளவடி
நடையான் நடந்து நால்வகைத் தாம்அவை
நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே
அடிமறி மண்டிலம் ஆகும் என்ப.'
 
 

- தொ. வி. 223

 

24