செய்யுளியல் - நூற்பா எண் 25 | 139 | | | | நரந்தம நாறும் தன்கையால் புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே; அருங்கலை இரும்பாணர் அகல்மண்டைத் துளைஉரீஇ, இரப்போர் கையுளும் போகி, புரப்போர் புன்கண் பார்வை சோர்தர, அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் சென்றுவீழ்ந் தன்று;அவன் திருநிறத்து இயங்கிய வேலே; ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகி யாங்கு, பிறர்க்கொன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே' | | | - யா. கா. 29 மே; புறநா. 255 | | | என்றும், | நிலைமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : | | `வேரல் வேலி வேர்க்கோள் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி; யார்அஃது அறிந்திசி னோரே? சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே' | | | - யா. கா. 29 மே; குறுந். 18 | | | எனவும், | டிமறிமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : | | `சூரல் பம்பிய சிறுகான் யாறே; சூர்அர மகளிர் ஆர்அணங் கினரே; வாரல் எனினே யான்அஞ் சுவலே; சாரல் நாட நீவரல் ஆறே' | | | - யா. கா. 29 மே. | | | (25) | | |
|
|
|