|
விளக்கம் |
நால்வகை ஆசிரியப்பாவிற்கும் உரிய சிதம்பரச் செய்யுட் கோவைப் பாடல்கள் பின்வருமாறு : |
நேரிசை ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `பொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப் பச்சிளங் கொடியொடு படரும் செக்கர் வார்சடைக் கற்பகத் தருவே.ழு | | | - சி. செ. கோ. 41 | | |
இணைக்குறள் ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர வெண்மதிக் கண்ணி சூடும் கண்ணுதல் கடவுள் புண்ணியப் பொதுவில் ஆடும் பூங்கழல் இறைஞ்சுதும் விண்மிசைப் போகிய வீடுபெறல் பொருட்டே.ழு | | | - 43 | | |
நிலைமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `மாயிரு விசும்பின் தூநிலாப் பரப்பிப் பாயிருள் சீக்கும் பனிமதிக் கண்ணியும் மின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்பப் பொன்செய்மலர்ப் பூங்கொன்றையும், புலியூர் மன்றின் ஒலிகழல் மிழற்றப் பரம நாடகம் இருவரைக் காட்டும் எரிநிறத்து ஐமுகத்து எண்டோள் முக்கண் கருமிடற்று ஒருவ!நின் செஞ்சடைப் பொலிதலின், நோயும் மருந்தும் ஓர்வழிக் கிடைத்தென ஆருயிர் தரித்தனள் அன்றே; அதாஅன்று, தெள்ளமுது அன்னவர் உள்உயிர் குடிக்கும்இத் திங்கள் ஒன்றே திருமுடிக்கு அணியின், கங்கை யாளும் உயிர்வா ழாளே.ழு | | | - 44 | | |
|