144

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

இவற்றோடு இடைமடக்கு ஆகியும் நான்கடி
அவற்றால் நடப்பின் அதன்துறை ஆதலும்,
கழிநெடில் அடிநான்கு ஒத்துஇறின் அகவல்
விருத்தம் ஆதலும், விதிஎனப் படுமே.
 
     
இது மேல் கூறிய ஆசிரியப்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள்
ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : மூன்றடியாய்ச் சீர் தம்முள் அளவு ஒத்து முடியுமாயின் அஃது
இலக்கணத்தான் நிறைந்த ஆசிரியத்தாழிசை ஆதலும்,

     ஈற்றுஅயல்அடி குறைந்தும் இடைஇடை குறைந்தும், ஈற்றுஅயல்அடி குறைந்து
இடைமடக்கு ஆகியும் இடைஇடை குறைந்து இடைமடக்கு ஆகியும் நான்கு
அடியான்வரின் அவை ஆசிரியத்துறை ஆதலும்,

     கழிநெடில்அடி நான்காய்த் தம்மில் அளவு ஒத்து அவை முடியின் ஆசிரிய
விருத்தம் ஆதலும் இலக்கணமாம். என்றவாறு.

     `ஆன்ற' என்ற மிகையானே ஆசிரியத்தாழிசை தனியே வரப்பெறும் ஆயினும்
ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்பு உடைத்து எனக்கொள்க. சீர்
வரையறுத்திலாமையான் ஆசிரியத்தாழிசையும் ஆசிரியத் துறையும் எனைத்துச் சீரானாய
அடியானும் வருதல் பெற்றாம்.

ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்த ஆசிரியத் தாழிசைக்குச்
செய்யுள் :

 

 

`கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்,
இன்றுநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
கொன்றை அம் தீங்குழல் கேளாமோ? தோழீ'