செய்யுளியல் - நூற்பா எண் 26

145

 
  `பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்,
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்,
ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ? தோழி'

`கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன்,
எல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
முல்லைஅம் தீங்குழல் கேளாமோ? தோழி'
 
 

- சிலப். ஆய். 1

 
எனவும்,
  தனியே வந்த ஆசிரியத்தாழிசைக்குச் செய்யுள் :
`வான்உற நிமிர்ந்தனை, வையகம் அளந்தனை,
பால்மதி விடுத்தனை, பல்உயிர் ஓம்பினை,
நீல்நிற வண்ண!நின் நிறைகழல் தொழுதனம்'
 
 

 - யா. கா. 30 மே.

 
எனவும்,

எருத்து அடி குறைந்த ஆசிரியத்துறைக்குச் செய்யுள் :

  `கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதி ராயின்
அரைஇருள் யாமத்து அடுபுலியேம்மஞ்சி அகன்று போக;
நரைஉரும் ஏறுநும் கைவேல் அஞ்சும்; நும்மை
வரைஅர மகளிர் வௌவுதல் அஞ்சுதும்; வாரலையே!'
 
 

 - யா. கா. 30 மே,

 
எனவும்,

இடைஇடை குறைந்து வந்த ஆசிரியத்துறைக்குச் செய்யுள் :

  `கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக்
     குருதிக் கோட்டின இருந்தாள் பெருங்கைக்
     குன்றாமென அன்றாமென
     குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்;

வென்றார்ந் தமைந்த விளங்கொளி இளம்பிறைத்
     துளங்குவாள் இலங்கெயிற் றழல்உளைப் பரூஉத்தாள்
     அதிரும் வானென எதிரும் கூற்றெனச்
     சுழலா நின்றன சுழிக்கண் யாளி;