செய்யுளியல் - நூற்பா எண் 26

147

 

அறுசீர்க் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய விருத்தத்திற்குச் செய்யுள்:

  `விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க, மின்வாள்
     வீசி, விரையார்வேங்
கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடும் மாதங்கி;
வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம், வடிக்கண்
     நீல மலர்தாந்தாம்,
தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம், என்னும்
     தன்கைத் தண்ணுமையே.'
 
     
எனவும் வரும்.

ஒழிந்த கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய விருத்தங்கட்குச் செய்யுள் கழிநெடிலடிக்கு
முன்னர்க் காட்டியவே கொள்க. (பக். 73, 74) பிறவும் வந்துழிக் காண்க.

விளக்கம்

சிதம்பரச் செய்யுட் கோவைப் பாடல்களை நோக்குவோம்.

ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்த ஆசிரியத் தாழிசைக்குச்
செய்யுள் :

  `சிற்றம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
கற்றைச் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
மற்றப் புனல்மங்கை வாணுதலை ஒக்குமால்.'

`பேரம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
வார்செஞ் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
நீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால்.'

`பொன்னம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
மின்னும் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
அந்நங்கை செங்கைக்கு அணிவளையும் ஒக்குமால்.'
 
 

- சி. செ. கோ. 47